இருசக்கர வாகனத்தில் நெருக்கமாக செல்லும் காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது..!

0 3726

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் நெருக்கமாக செல்லும் காதல் ஜோடிகளை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி நகை, பணம் பறித்து வந்த நபரை, போலீசார் கைது செய்தனர். 

கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர்,  தான் காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்து வைத்துக்கொண்டு, தனியாக சென்றபோது மிரட்டி, தான் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றதாக, காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதே போல் ஓமலூர் எம்.ஏ பட்டதாரி பெண் ஒருவரும் புகாரளித்ததை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த சர்க்கரை வியாபாரி சரவணன், நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடமிருந்து 4 சவரன் நகை, ஒரு கார் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments