பயங்கரவாத குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிவியாவில் கலவரம் வெடித்தது..!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கார்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இரவு வேளையிலும் மாகாண தலைநகரின் சில பகுதிகளில் கார்கள் மற்றும் டயர்களை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்தி எரிந்தனர்.கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
கடந்த 2019-ல் பொலிவியாஅதிபராக பதவிவகித்த ஈவோ மோரல்ஸ்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக நடைபெற்ற விசாரணையில் சாண்டா குரூஸ் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
Comments