மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் விவகாரம்.. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

0 2384

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி ஆதாரை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி (தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் வக்கீல் ரவி,)சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த டிசம்பர் 21--ந்தேதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து (வக்கீல் ரவி), உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments