போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக ஊராட்சி மன்றத்தலைவர் மீது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்பனா பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சான்றிதழ் அளித்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பாக்கியராஜ் என்பவர், கல்பனா பிற்படுத்தப்பட்டவர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை, எனவே அவரது வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments