ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2183

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்களது பணி, நிரந்தரம் செய்யப்படும் என்று எண்ணியிருந்த ஒப்பந்த செவிலியர்களின் எதிர்காலத்தை, இந்த அரசாணை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதால், ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments