புத்தாண்டு தினத்தன்று, 3.5 லட்சம் பிரியாணி டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனம்..!
புத்தாண்டு தினத்தன்று, மூன்றரை லட்சம் பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஹைதராபாத் பிரியாணிக்கு 76.4 சதவீத ஆர்டர்கள் வந்ததாக கூறியுள்ள அந்நிறுவனம், ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் சிப்ஸ் பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும், 2.5 லட்சத்திற்கும் அதிமான பீட்சா ஆர்டர்கள் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் புத்தாண்டில், 12 ஆயிரத்து 344 பேர் கிச்சடி ஆர்டர் செய்துள்ளனர் என்ற சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.
Comments