புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்..!
புத்தாண்டு பிறந்த சுமார் அரைமணி நேரத்தில், கீவ் மற்றும் பிற நகரங்களின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின.
தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வெற்றி கிடைக்கும் வரை சண்டையை தொடருவோம் என ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரையில் குறிப்பிட்ட நிலையில், தார்மீக மற்றும் வரலாற்று உரிமை, ரஷ்யாவின் பக்கம் உள்ளதாக, தனது புத்தாண்டு உரையில் புதின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று 20 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், அவற்றில் 12-ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Comments