கேரளாவில் சபரிமலை கோயிலுக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க கேரள அரசு ஒப்புதல்

0 2090

சபரிமலை கோயிலுக்கு அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவில், ஏற்கனவே 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், சபரிமலைக்கு அருகே கோட்டயம் மாவட்டத்தில் 5-வது விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

எருமேலி தெற்கு - மணிமலை இடையே 2,570 ஏக்கர் நிலமும், செருவல்லி ரப்பர் எஸ்டேட்டுக்கு வெளியே 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளதாக வருவாய்த்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,500 மீட்டர் ஓடுபாதையுடன் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments