மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜன.31 வரை நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1896

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்குபின் கண்டிப்பாக காலநீட்டிப்பு செய்யப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமையகத்தில் பேட்டியளித்த நிலையில், தற்போது 2 ஆயிரத்து 811 இடங்களில் ஆதார் இணைப்பிற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில், கூடுதலாக 2 ஆயிரத்து 811 நடமாடும் முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆதாரை இணைப்பதால் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றம் வராது என்றும், அது குறித்து வதந்தி பரப்பி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments