இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது - அமித்ஷா

0 1782

இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால், இந்தியா-சீனா எல்லைக்குறித்து தான் கவலைப்படவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதால் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது என தெரிவித்தார்.

இந்தோ-திபெத் எல்லை போலீசாருக்கு மக்கள் ஹிம்வீர் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாகவும், இது பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளைவிட பெரியது என்று தான் நினைப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments