விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஈஸ்வரன்,எம்.எல்.ஏ., சரமாரி கேள்வி

0 1824

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈஸ்வரன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்க வேண்டும் என்ற விதி முறையை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்றார்.

மாவட்டத்தில் காலியாக உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரியில் இருந்து வரும் நீரேற்றுப்பாசன திட்டம் மூலம் தண்ணீரை நிரப்பவேண்டும் என்ற ஈஸ்வரனின் வேண்டுகோளுக்கு, அப்படி செய்ய வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடியாது என்று சொல்லாமல், சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments