3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்

0 2554

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே பழனி முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 3 கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, போக்குவரத்துத் துறை சார்பில், ஏழு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments