பாரத மாதா உருவத்தை தத்ரூபமாக களிமண்ணால் வடித்து, கவனம் ஈர்த்த அரசுப்பள்ளி மாணவன்
மாநில அளவிலான கலைத்திருவிழாவில், பாரத மாதா உருவத்தை தத்ரூபமாக களிமண்ணால் வடித்து, புதுக்கோட்டையைச்சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற இந்த கலைத்திருவிழாவில், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், விராலிமலை ஒன்றியம் சூரியர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் முல்லையூரைச் சேர்ந்த மணிகண்டன், பாரத மாதா உருவத்தை தத்ரூபமாக களிமண்ணால் வடிவமைத்து அனைவரது கவத்தையும் ஈர்த்துள்ளார்.
Comments