சமூக வலைதளங்கள் மூலம் துணை இல்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து ஆபாச படங்கள் அனுப்பிய 2 பேர் கைது!

0 2613

சமூக வலைதளங்களில், துணை இல்லாதளின் விவரங்களை சேகரித்து, அவர்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த பெண் ஒருவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் மற்றும் படங்களை அனுப்பி, தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, சேலத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சென்னை தியாகராயநகரை சேர்ந்த மதியழகனை கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments