புத்தாண்டு கொண்டாட்டம்: இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஒன்றாக பயணித்தால், வாகனங்கள் பறிமுதல் - காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு மேல், இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஒன்றாக பயணித்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு தினம் இன்று இரவு கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் 16ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் முக்கிய சாலைகளில் 300 தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. பைக் ரேசினை தடுக்கும் விதமாக, ஆங்காங்கே சாலையில் போலீசார் ரோந்துப்பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் இன்றிரவு 8 மணிக்கு மேல் மூடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments