காங்கிரசில் மீண்டும் இணையப்போவதாக வந்த வதந்திகளுக்கு குலாம் நபி ஆசாத் மறுப்பு

0 2681

காங்கிரசில் மீண்டும் இணையப்போவதாக வெளியான தகவல்களை, குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.

ஜனநாயக ஆசாத் கட்சி என்ற தனிக்கட்சியையும் அவர் தொடங்கினார். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலின் போது பாஜகவை எதிர்கொள்ள வலிமையான ஒரு தேசிய கட்சியால்தான் முடியும் என்றும் கூறினார்.இதனால் அவர் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பலாம் என செய்திகள் பரவின.

ஆனால், இதனை மறுத்துள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரசில் மீண்டும் இணையப்போவதாக தம்மைப் பற்றி வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். சில காங்கிரஸ் தலைவர்கள் தம்மைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி, குழப்பி வருவதாகவும் குலாம் நபி ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments