தொண்டு நிறுவன உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. 10 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

0 4280

திருச்செந்தூர் அருகே தொண்டு நிறுவன உரிமையாளரை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆறுமுகநேரியைச் சேர்ந்த பால குமரேசன் என்பவர் ஆதவா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் மற்றும் பால் பண்ணை மற்றும் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

ஆறுமுகநேரியில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்களால் வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்து வந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை பாலகுமரேசன் உள்பட பலர் முன்னெடுத்து சென்றனர். இந்த நிலையில் நேற்று ஆதவா ரெஸ்டாரண்டில்  பாலகுமரேசன் இருந்த போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் பனை மரத்தின் கருக்கு மட்டையால் சரமாரியாக தாக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments