பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - 73 லட்சம் கோழிகள் அழிப்பு
ஜப்பானில், பறவை காய்ச்சல் எதிரொலியால் 3 மாதங்களில் 73 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதம் முதல் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன் பின்னர், பல்வேறு மாகாணங்களுக்கும் பரவியது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் 3 கி.மீ சுற்றளவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments