வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு!

0 2505

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்று பரவல் எதிரொலியாக, வெளிநாடுகளில் இருந்துவரும் விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பயணிகளும் பயணத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்றும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments