எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது - சென்னை உயர் நீதிமன்றம்

0 4983

எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோவில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாக தெரிவித்தார். 

ஒரு காலத்தில் பொதுமக்கள் தங்கள் சொத்துகளை கோவிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்தது என்றும் ஆனால் தற்போது சொத்துகளை அபகரிப்பதும், சுரண்டுவதும் பயத்தை அளிக்கிறது என்றும்  நீதிபதி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments