செம்பி படத்தில் மதப்பிரச்சாரமா..? இயேசுவின் உவமையாக அஸ்வின்.. மன்னிப்புக் கேட்ட இயக்குனர்..!

0 5300
செம்பி படத்தில் மதப்பிரச்சாரமா..? இயேசுவின் உவமையாக அஸ்வின்.. மன்னிப்புக் கேட்ட இயக்குனர்..!

செம்பி படத்தின் மூலம் மதப்பிரச்சாரம் செய்கிறீர்களா? என்று சிறப்புக் காட்சி பார்த்த சினிமா விமர்சகர்கள், இயக்குனர் பிரபுசாலமனுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

40 கதை அஸ்வின் நாயகனாகவும் கோவை சரளா மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள செம்பி படத்தின் சிறப்புக் காட்சி செய்தியாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்டது.

படத்தின் இறுதிக்காட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நாயகன் அஸ்வினை, இயேசு போல உவமைப்படுத்தி காட்டி இருப்பதாக கூறப்படுகின்றது. நல்ல படம் எடுத்து இருக்கீறீர்கள்,... ஏன் இறுதியில் இது போல மதப்பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று படம்பார்த்தவர்களில் சிலர் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரபுசாலமோன், கிறிஸ்துவம் மதமே இல்லை என்றும் இயேசு மதத்தை பிரச்சாரம் செய்யவும் இங்கு வரவில்லை அவர் அன்பை நிலை நாட்டவே வந்தார் என்று செய்தியாளர்கள் மத்தியில் பிரசங்கம் செய்தார்.

எல்லா மதங்களும் அன்பை தான் வலியுறுத்துகின்றது, மற்ற மதங்களையும் சுட்டிக்காட்டலாமே என்று சிலர் அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து யாருடைய மனதாவது கஷ்டப்படுத்தி இருந்தால் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களில் ஒரு தரப்பினர், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று தெரிவித்து வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments