கணவனின் திருமணத்தை மீறிய காதலால் மனைவி விபரீத முடிவு.. மகனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தாய் தற்கொலை!

0 2835

தம்பியை நன்றாக பார்த்துக்கொள், நன்றாக படிக்க வேண்டுமென, மகனுக்கு உருக்கமான வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு, சிவகங்கை அருகே, தாய் தற்கொலை செய்துகொண்டார்.

கருதப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கணவன் பாண்டியனின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால், தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பெண் தோழியுடனான நட்பை கைவிடுவதாக உறுதியளித்த நிலையிலும் பாண்டியனால் அதனை செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால், தனது தற்கொலைக்கான காரணத்தை ஆடியோவாக பதிவுசெய்து விட்டு, மகேஸ்வரி தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆடியோவை கைப்பற்றிய சிவகங்கை போலீஸார், வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments