புலியை புறமுதுகிட்டு ஓடச் செய்த காளை.. ஜல்லிக்கட்டில் களமிறங்குகிறது..! மாடுபிடி வீரர்களுக்கு காத்திருக்கும் சவால்

0 3272

புலியை புறமுதுகிட்டு ஓடச் செய்த காளை ஒன்று இந்த முறை  தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் இறங்க தயாராகி வருகிறது அது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஜல்லிக்கட்டு, இந்த பெயரை சொன்னாலே உற்சாகமும் வீரமும் தெறிக்கும். கட்டுப்பட மறுக்கும் காளைகளை, அடக்கியேத் தீருவேன் என்று சீறும் காளையர்களால் தமிழர்களின் வீரம் உலகிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொங்கல் திருநாளை யொட்டி நடக்கும் வீரமும், அன்பும் கொண்ட ஜல்லிக்கட்டில் புதிய வரவாக, காட்டில் தன்னை தாக்க வந்த புலியை புறமுதுகிட்டு ஓடச் செய்த காளை ஒன்று களம் இறக்கப்பட உள்ளது

இந்த வைரல் வீடியோவில் புலியை சம்பவம் செய்த காளையை கர்நாடக மாநில வனத்துறையிடமிருந்து வாங்கியுள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த, இலங்கையின் உவா மாகாண முதலமைச்சர் செந்தில் தொண்டைமான், இந்த காளைக்கு டைகரென பெயரிட்டு திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பயிற்சி அளித்து வருகிறார் .

மேலும், பஞ்சாப்பிலிருந்து கேஜிஎப் என்ற காளையையும் வாங்கி வந்துள்ள செந்தில் தொண்டைமான் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்க தயார் படுத்தி வருகிறார்.

இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மாதந்தோறும் நீச்சல், ஓட்டப்பயிற்சி அளிப்பதோடு ஜல்லிக்கட்டுக்கு சில வாரங்களுக்கு முன்பிலிருந்து வாடிவாசலிலிருந்து வெளியே வரும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காளைகளுக்கு பேரீச்சம் பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித சிறப்புடன் காளைகளும் காளையர்களும் தங்களை தயார்படுத்தி வருவதால் வருகிற ஜல்லிக்கட்டுக்கான தீப்பொறி இப்போதே பறக்க ஆரம்பித்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments