உஸ்பெகிஸ்தானில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலி.. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் விசாரணை!

0 2038

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை, சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்த 21 குழந்தைகள் உட்கொண்டதில், 18 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அதில் நச்சுத்தன்மை உடைய எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த புகார் தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் விசாரித்து வரும் நிலையில், மருந்து தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மரியோன் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் காம்பியா நாட்டில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்தை குடித்த 66 குழந்தைகள் பலியானதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments