இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 76 சதவீத மக்களின் உணவுத் திட்டத்தில் மாற்றம்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 76 சதவீதம் மக்களின் உணவுத்திட்டம் மாறி உள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகையில் 73 சதவீதமானோர் விலை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, 52 சதவீதத்தினர் தங்களது உணவின் அளவை குறைத்துக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 40 சதவீத மக்கள் 3 வேளையும் உணவு சாப்பிடுவது இல்லையெனவும், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை விட தென் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Comments