டிவிஎஸ் XL மொபட்டை எஞ்சின் இல்லாத இ-பைக்காக மாற்றி உருவாக்கிய ஓவிய ஆசிரியர்!

0 3463

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, டிவிஎஸ் XL மொபட்டை, எஞ்சின் இல்லாத இ-பைக்காக, ஓவிய ஆசிரியர் மாற்றி உருவாக்கியுள்ளார்.

அரங்குபட்டியை சேர்ந்த வைரமூர்த்தி, பேட்டரியை பயன்படுத்தி மொபட்டை இயக்கும் முயற்சியை செய்து வந்தார். இதற்காக, பல மெக்கானிக்குகளிடம் ஆலோசனை பெற்றும், யூ-டியூபை பார்த்தும் முயற்சித்த அவர், ஒருகட்டத்தில் எஞ்சின் இல்லாத பேட்டரி மூலம் இயங்கும் இ-பைக்கை உருவாக்கினார்.

இந்த இ-மொபட்டில், ஒரு யுனிட் அதாவது 1000 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்தி, 60 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்றும், 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும் எனவும் வைரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments