புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் மட்டுமே அனுமதி.. ‘செக்’ வைத்தது போலீஸ்

0 2389

சென்னையில் புத்தாண்டையொட்டி எக்காரணத்தை கொண்டும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் எந்த கொண்டாட்டமும் கூடாது  என்று, நட்சத்திர ஓட்டல்களுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினருடன், சென்னை பெருநகர காவல்துறையினர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அன்பு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து விரிவான உத்தரவுகளை, நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினருக்கு பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, ஓட்டல்களில் 80 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், நீச்சல் குளங்கள் அருகே புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது, குறிப்பாக நீச்சல் குளங்கள் மீது தற்காலிக மேடைகள் அமைக்கக்கூடாது, எக்காரணத்தை கொண்டும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் எந்த கொண்டாட்டமும் கூடாது.

பெண்களுக்கு எதிராக ஈவ்டீசிங் நடக்க அனுமதிக்கக்கூடாது, அதிக மதுபோதையில் இருப்பவர்களை ஓட்டல்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்த போலீசார், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க, மது அருந்தும் வாடிக்கையாளருக்கு உபர் நிறுவன QR கோடுகள் மூலம், வீட்டிற்கு செல்ல மாற்று வாகனம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு ஓட்டல்களிலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும், சானிடைசர், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உபயோகத்தை தடுக்க வேண்டும், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக, ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments