சம வேலை - சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்
சம வேலை, சம ஊதியம் என்ற அடிப்படையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இருபதாயிரம் இடைநிலை ஆசிரியர்களில் ஐந்தாயிரம் பேர் பணி உயர்வு பெற்ற நிலையில், பதினைந்தாயிரம் பேருக்கு பணி மற்றும் ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தினருடன் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.
தங்களது கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Comments