புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!
புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் வெளியூருக்கு சென்று பணிபுரியும் நபர்கள், தேர்தலில் வாக்களிக்க சொந்த தொகுதிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிய இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் ஒரே சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கை பதிவு செய்ய முடியும்.
இதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இருக்கும் சவால்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்படியும், ஜனவரி 16ல் நடைபெறவுள்ள செயல்முறை விளக்கத்தில் கலந்து கொள்ளும்படியும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
Comments