கோவிட் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு.. இந்திய மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்குவதில் சீனமக்கள் ஆர்வம்..!
சீனாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், அங்கு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச்சந்தையில் இந்திய மருந்துகளின் விற்பனை கூடியுள்ளது.
சீனாவில் கோவிட் மருந்துகள் கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மலிவான மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்க சீனர்கள் விரும்புகின்றனர். சீன அரசு நடப்பு ஆண்டில் இரண்டு கோவிட் தடுப்பு மருந்துகளை மட்டுமே அங்கீகரித்தது.
ஃபைசர் நிறுவனத்தின் Paxlovid மற்றும் சீன நிறுவனத்தின் Azvudine, ஆகிய இந்த இரண்டு மருந்துகளும் சீனாவில் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கின்றன.
சப்ளை குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்துள்ளது.
Comments