ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!
சென்னையில், ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி பணமோசடி செய்ததாக டெல்லியை சேர்ந்த இரண்டு தமிழக பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு வங்கிமோசடி புலனாய்வு பிரிவில் சைத்தாப்பேட்டையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி (சரவணன்) ஒருவர் புகார் மனு அளித்தார்.
அதில், 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர்கள், சவுத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, ஆண்டுக்கு 1% வட்டியில் கடன் தருவதாகக் கூறியதை நம்பி, 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
செல்போன் எண்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லி விரைந்த தனிப்படை போலீசார், மோசடியில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர்.
Comments