''தமிழக அரசு இலவச வேட்டி - சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது..'' - அண்ணாமலை..!
தமிழக அரசு இலவச வேட்டி - சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்குவது வழக்கம் என்றும் ஆனால், இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு வழங்கிய நூல், தரம் குறைவாக இருந்ததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை சேலை உற்பத்தி 42 சதவீதமும், வேட்டி உற்பத்தி 29 சதவீதமும் மட்டுமே முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments