புதிய வகை கோவிட் குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் சஞ்சய் ராய் விளக்கம்..!
சீனாவில் இருந்து பரவும் பிஎப் 7 உருமாறிய கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் சஞ்சய் ராய் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வகை கோவிட் பரவும் வேகம் மிகவும் அதிகம் என்று கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்ட ஒரு நபர் 10 முதல் 18 பேருக்கு நோய்த்தொற்றை பரப்பக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் வந்த நபர்களுக்கும் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட இது பரவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பும், இந்திய அரசும் வெளியிட்ட வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும், ஜனவரி மாதத்தில் கோவிட் பரவல் அதிகமாகக்கூடும் என்றும் சஞ்சய் கே.ராய் கூறியுள்ளார்.
Comments