தமிழகத்தில் ரத்த ஓவியத்திற்கு இன்று முதல் தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

0 2456

தமிழகத்தில், ரத்த ஓவியம் வரைவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மா.சுப்பிரமணியன், தடையை மீறி யாராவது, ரத்த ஓவியங்கள் வரையும் கூடங்களை வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில், 533 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கும், துபாய், கம்போடியாவில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments