புத்தாண்டு கொண்டாட்டம்: டிச.31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் - கட்டுப்பாடுகளை வெளியிட்டது காவல்துறை!

0 3027

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என, காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் வகையில், காவல்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, குடும்பத்துடன் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நள்ளிரவில் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments