பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.. தலிபான்களுக்கு ஐ.நா. சபை வலியுறுத்தல்..!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள், அண்மையில் பெண்கள் கல்வி நிலையங்கள் செல்ல தடை விதித்தனர்.
இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்தான தங்களது கொள்கைகளை உடனடியாக தலிபான்கள் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடுகள் அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களின் துன்பத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அப்பாலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றுதான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments