விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை விதித்த ரஷ்யா..!
கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவின் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர் விலை உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன.
இந்த விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்யும் ஆணையை ரஷ்யா வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் ரஸ்யா அறிவித்துள்ளது.
Comments