57வது பிறந்தநாளை கொண்டாடிய இந்தி நடிகர் சல்மான் கான்.. அவரை காண ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி..!

0 2173

இந்தி நடிகர் சல்மான் கானை காண அவரது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சல்மான் கான் தனது 57வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி மும்பையிலுள்ள அவரது வீட்டு முன்பு அதிகாலை முதலே ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

சல்மான் கான் படம் போட்ட டிசர்ட்டுகள் அணிந்தும் இனிப்புகளைப் பரிமாறியும் ரசிகர்கள் உற்சாகமாக சல்மான்கானின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பால்கனியில் இருந்து சல்மான் கான் ரசிகர்களை பார்த்தபோது, அவரை காண ரசிகர்கள் முன்டியடித்தனர்.

அப்போது ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தடியடி நடத்தி அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments