ரிசர்வ் பெட்டியில் ஓசி 1000 வடக்கன்ஸ் அடித்து வெளியேற்றம்..! இப்படி போனா ரெயில்வே திவால் தான்..!
பெங்களூரில் இருந்து சென்னைவழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அமர்ந்து கொண்டு இறங்க மறுத்து அடம்பிடித்த 1000 வட மாநில பயணிகளை திருவொற்றியூரில் ரெயிலை நிறுத்தி போலீசார் அடித்து இறக்கி விட்டனர்
பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் நீயூ டின்சிகியா வாரந்திர விரைவு ரயில் பெரம்பூர் வந்தடைந்தது.
அதில் திருவொற்றியூர் பெரம்பூர் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் அசாம் மாநிலத்தில் நடைபெறும் சாரண சாரணியர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏறினர்.
தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியில் , ஒரு சீட்டுக்கு 7 பேர் வீதம் வட மாநில இளைஞர்கள் குடும்பம் மற்றும் மூட்டை முடிச்சுகளோடு அமர்ந்திருந்தனர்.
அவர்களை எழுந்திருக்க சொல்லியும் அவர்கள் மறுத்ததால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் வந்து வெளியேற சொல்லியும் அவர்கள் எழுந்திருக்க மறுத்ததால், ரெயில் புறப்பட்டது.
மாணவ மாணவிகள் தாங்கள் இப்படியே அசாம் செல்ல இயலாது என்று பெற்றோர்களிடம் புகார் தெரிவிக்க திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் அந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது.
ஓசி பயணம் மேற்கொண்ட வட மாநில இளைஞர்கள் அவர்களது குடும்பத்தினருடன் அதிரடியாக வெளியேற்றப் பட்டனர்
தங்கள் குழந்தைகளுக்கு இடையூறாக அமர்ந்திருந்த வட மாநிலத்தவரை மாணவ மாணவிகள் பெற்றோரே களமிறங்கி ரெயிலில் இருந்து இறக்கி விட்டனர்
போலீசார் ஒவ்வொரு இருக்கையாக சென்று இருக்கையில் இருந்து இறங்க மறுத்த வித் அவுட் வில்லங்கன்களை அடித்து இறக்கிவிட்டனர்
இதன் காரணமாக அந்த ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது
நம்ம ஊர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை மறித்து பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு 10 மடங்கு அபராதம் விதிக்கும் ரெயில்வே நிர்வாகம் இது போன்று ஓசி யிலேயே மாநிலம் விட்டு மாநிலம் சுதந்திர பயணம் மேற்கொள்ளும் வட மாநில பயணிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன் ? என்பதே காசு கொடுத்து ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
Comments