இரண்டு குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபரீத முடிவு..!

0 2017

சேலம் மேட்டூர் அருகே, குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், காவிரி நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மூத்த மகள் நேகாவிற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக நேகா சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், யுவராஜின் இளைய மகளுக்கும் பரிசோதனையில் நீரிழிவு பாதிப்பு தெரியவந்த நிலையில், குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தனது சகோதர - சகோதரிகளுக்கு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் யுவராஜ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
அடிப்பாளாறு காவிரி நீர்த்தேக்கத்தில் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments