”சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது செல்லும்” - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக, தமிழக அரசு கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசாணை பிறப்பித்த நிலையில், கடந்த மே 30-ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு, உகந்த காரணங்கள் இருப்பதாக கூறினார். எனவே, சொத்து வரியை உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும் என்றும் தீர்ப்பளித்தார்.
Comments