சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற பணியாளர்.. வைரலாகும் வீடியோ..!
திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவர், இணைப்பதிவாளர் அனுமதியுடன் மீண்டும் பணி புரிந்து வந்த நிலையில், அவர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் செல்போன் வீடியோவில் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த மணி என்பவர் பணி ஓய்வு பெற்ற பின்னரும், இணைப்பதிவாளர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும் கிளார்க் பிரகாஷ் என்பவரின் அனுமதியோடு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்து வந்த நிலையில் இந்த குறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
Comments