நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை.. நீதித்துறை நாட்டு மக்களுக்கு கட்டுப்பட்டுள்ளது - மத்திய சட்டத்துறை அமைச்சர்
நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்த குற்றச்சாட்டுக்கு ஹரியானாவில் நடைபெற்ற அகில பாரதிய ஆதிவக்த பரிசத்தின் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோது கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
மேலும் அவர், வழக்கறிஞர்கள் சிலர் வழக்கொன்றுக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறுவதாகவும், பெரிய வழக்கறிஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மற்ற வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டுமென்றும் கூறினார்.
நீதிமன்றங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களுக்கு சென்று வாதாட முன்வர வேண்டும் என்றும் ரிஜிஜு வலியுறுத்தினார்.
Comments