பாக்ஸிங் தினம் : 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நீச்சலடித்து மகிழ்ந்த ஆண்கள், பெண்கள்..!
செக் குடியரசின் பிரேக் நகரில் பாக்ஸிங் தினத்தையொட்டி உறைபனி ஆற்றில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக நீச்சலடித்து மகிழ்ந்தனர்.
1920 களில் அப்போதைய செக்கோஸ்லேவாக்கியாவில் குளிர்கால நீச்சலை பிரபலப்படுத்திய ஆல்பர்ட் நிகோடெமின் நினைவாக ஆண்டுதோறும் பாக்ஸிங் தின குளிர்கால நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த வருட போட்டியில், 5 டிகிரி செல்சியஸ் குளிரில், வல்டவா ஆற்றில் 100, 300 மற்றும் 750 மீட்டர் என மூன்று பிரிவுகளில் செக் குடியரசு, ஜெர்மனி, போலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 350 நீச்சல் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இலக்குகளை நோக்கி சீறி பாய்ந்தனர்.
Comments