வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது..!
ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வந்த சந்தா கோச்சார் 2018ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3ஆயிரத்து 250 கோடி ரூபாயை கடனாக கொடுத்தார்.
இதற்கு பிரதிபலனாக, தனது கணவர் தீபக்கோச்சார் நடத்தி வரும் நிறுவனத்திற்கு 64 கோடி ரூபாயை முதலீடு என்ற பெயரில் லஞ்சமாக பெற்ற புகாரில் சந்தா கோச்சார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கோச்சார் தம்பதியினரை 2 தினங்களுக்கு முன் சிபிஐ கைது செய்த நிலையில், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்தும் கைது செய்யப்பட்டார்.
Comments