லாலுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் சிபிஐ விசாரணை..!
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரான பீகாரின் லாலுபிரசாத் யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த லாலு, மும்பையின் பந்த்ரா ரயில் நிலைய குத்தகை, டெல்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகளை டிஎல்எப் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதற்காக டெல்லியில் ஒரு பங்களாவை லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் லஞ்சமாக பெற்றதாக புகார் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் 2021ம் ஆண்டு விசாரணையை முடித்துக் கொண்டதாக அறிவித்த சிபிஐ தற்போது மீண்டும் விசாரணையை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments