சீனாவில் இருந்து திரும்பிய உள்ளூர் நபருக்கு கொரோனா பாதிப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைக் காண வந்த ஆக்ராவைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகள் லக்னோவுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பத்து நாட்கள் சீனாவில் இருந்து அவர் இந்தியா திரும்பியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாஜ்மகாலைக் காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாதிப்புக்குள்ளான நபர் தங்கியிருந்த ஓட்டல் சந்தித்துப் பேசிய நபர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து கோவிட் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Comments