வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு - வானிலை மையம்!
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து விட்டதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது, தொடர்ந்து மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, திங்கட்கிழமையன்று காலை குமரிக்கடலை நெருங்கும் என்றும் கணித்துள்ளது.
இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கட்கிழமையன்று கனமழைக்கும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments