மரியுபோல் நகரின் புகழ்பெற்ற திரையரங்கை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!
ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில், போரின்போது, நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கம் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.
மரியுபோலில், போர் உக்கிரமடைந்தபோது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் இந்த திரையரங்கில் தஞ்சமடைந்திருந்தனர்.
வான் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய படைகளுக்குத் தெரியும் விதமாக, குழந்தைகள் என பெரிய எழுத்துகளால் காட்சிப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் திரையரங்கு மீது குண்டு வீசி ரஷ்ய படைகள் போர் குற்றம் புரிந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments