நடிகர் விஜய் தான் இப்போது சூப்பர்ஸ்டார்..! வாரிசு விழாவில் சரத்குமார்... நம்பர் 1 நம்பர் 1 கத்திய தயாரிப்பாளர்
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று கூறிய நடிகர் சரத்குமார், அவருக்கு பின்னால் நான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்க மாநாடு போல விமரிசையாக நடைபெற்ற வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில், ரசிகர்களை பக்கத்தில் சென்று விஜய் சந்திக்க ஏதுவாக ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டிருந்த வளையம் போன்ற நடை மேடையில் சென்று, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த ரசிகர்களை சந்தித்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய்.
விஜய் நடித்த 66 படங்களின் போஸ்டர்கள் டிஜிட்டல் திரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவில் விஜய்யை நாளைய சூப்பர் ஸ்டார் என்று நான் கூறிய போது, கலைஞர் ஆச்சர்யப்பட்டார், அது இப்போது நடந்துவிட்டது. விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்தார்.
வாரிசுக்கு ஆங்கிலத்தில் முதல் எழுத்து V, விக்டரி என்பதன் முதல் எழுத்தும் V, விஜய் என்பதன் முதல் எழுத்தும் V, எல்லாமே V மட்டும் தான் என்ற சரத்குமார், விஜய் இதை விட பெரிய இடத்திற்கு செல்வார் என்றும், அதற்கு அவர் பின்னால் நானும் இருப்பேன் என்றும் கூறினார். இதைக்கேட்டு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
எல்லாரும் வயதானால் அனுபவம் வரும், அழகாக மாட்டார்கள். முதல் முறையாக சொல்கிறேன் i am became your fan என்று நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய்யை பார்த்து கூறினார்.
அதற்கு ஒரு படி மேலே போய் பேசிய வி.டி.வி. கணேஷ், விஜய்யை பார்த்தால் ஆம்பளைக்கே புடிக்குது என்றும் பாராட்டினார்
காமெடி நடிகர் சதீஷ் பேசிய போது, ஹீரோவ லவ் பண்ற ரசிகர்கள பார்த்திருப்போம், ஆனா ரசிகர்கள லவ் பண்ற ஒரே நடிகர் விஜய் மட்டுமே என்று கூறி, மேடையில் இருந்து இறங்கி விஜய்யை கட்டியணைத்தார்
படத்தின் பட்ஜெட் 55 கோடி அல்லது 60 கோடி ரூபாய் இருக்கும், ஆனால் அதைவிட கூடுதலாக செலவு ஏற்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் தில் ராஜூ, தளபதி நடிக்க வந்த படம் எவ்வளவு செலவானாலும் பார்த்துக்கலாம் என்று சொன்னதாக, நடிகர் ஷியாம் தெரிவித்தார்.
விழாவின் இடையே நடன இயக்குனர் ஜானியுடன் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகை ராஷ்மிகா , தான் அடுத்த படத்தில் விஜய்யுடன் நடிக்காவிட்டாலும் அவரை ரசித்து கொண்டே இருப்பேன் என்று ஐ லைக் யூ என்று விஜய்யை நோக்கி கூறினார்
மேடையில் நம்பர் ஒன் நம்பர் ஒன் என்று கத்திய தயாரிப்பாளர் தில்ராஜூ சந்தேகமே இல்லை விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
Comments